/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் குரங்குகள்; மக்கள் பீதி
/
திண்டுக்கல்லில் குரங்குகள்; மக்கள் பீதி
ADDED : மார் 24, 2024 05:55 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்-திருச்சி ரோடு காந்திஜி நகர் பகுதியில் குரங்குகள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது. இதைக்கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள் இருக்கும் நிலை உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் தெரு நாய்களும் தண்ணீரின்றி குடியிருப்புகளை தஞ்சம் அடைந்துள்ளன.
இதேபோல் சிறுமலை போன்ற காட்டுப்பகுதியிலிருந்து வரும் விலங்குகளும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களுக்கு அச்சுறுத்துகிறது. இந்நிலையில் நேற்று 4 குரங்குகள் திண்டுக்கல்- திருச்சி ரோடு காந்திஜிநகர் பகுதியில் வீடுகள் மேல் நின்றப்படி ஒவ்வொரு வீடாக தாவியது.
குடியிருப்புகளுக்குள் புகுந்து உணவு பொருட்களையும் சூறையாடுகிறது. ரோட்டில் செல்வோரை அச்சுறுத்தும் விதமாக அங்கும் இங்குமாய் ஓடியது. வனத்துறையினர் இவற்றை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

