/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்
/
உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்
ADDED : மே 02, 2024 06:15 AM

வேடசந்துார்: ரங்கமலை பகுதியில் வாழும் குரங்குகள் வறட்சியால் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி பெரிதும் அவதிப்படுகின்றன. வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது ரங்கமலை. இதன் தொடர்ச்சியான கனவாய் பகுதியின் குறுக்காக தான், கரூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலை செல்கிறது. இங்கு ரோட்டுக்கு மேற்கு பகுதியில் இடச்சியாயி கோயில் உள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர், இடச்சியாகி கோயிலில் காலை நேரங்களில் சுவாமியை கும்பிட்டு சிதறு தேங்காய் விட்டு செல்வதால் அப்பகுதியில் உள்ள குரங்குகள், கோயில் பகுதியில் சுற்றித் திரிவதும் அதன் பிறகு மலை பகுதிகளுக்கு செல்வதும் வழக்கமாகிவிட்டது. தற்போது கோடை காலமாக இருப்பதால் ரங்கமலை மலைப்பகுதியே வறட்சியாக உள்ளது.
இதனால் உணவுகளின்றி குரங்குகள் எலும்பும் தோலுமாக உள்ளன. அவ்வப்பபோது சிலர் தண்ணீர்,உணவு கொடுத்து குரங்குகளை காப்பாற்றுகின்றனர். இருந்தபோதிலும் குரங்குகள் தவிக்கின்றன. வனத்துறை இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

