தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருங்கை விலை சரிவு

முருங்கை விலை சரிவு

முருங்கை விலை சரிவு


ADDED : ஜூலை 23, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், ஜூலை 23-

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.37க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், சாலைப்புதுார், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனுார் பகுதிகளில் விளையும் முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்ததால் கிலோ ரூ.47க்கு விற்பனை ஆனது. தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடப்பதாலும், உடன்குடி பகுதியில் இருந்தும் மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.37க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us