sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொசுத்தொல்லை ஜோர்; நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் திண்டுக்கல் 47 வது வார்டு மக்கள்

/

கொசுத்தொல்லை ஜோர்; நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் திண்டுக்கல் 47 வது வார்டு மக்கள்

கொசுத்தொல்லை ஜோர்; நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் திண்டுக்கல் 47 வது வார்டு மக்கள்

கொசுத்தொல்லை ஜோர்; நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் திண்டுக்கல் 47 வது வார்டு மக்கள்


ADDED : செப் 08, 2024 05:15 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: நடுரோட்டில் மின்கம்பம், தேங்கும் சாக்கடைகளால் அவதி, தண்ணீருக்கு தடுமாற்றம் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 47 வது வார்டு மக்கள்.

நாகல்நகரின் முக்கிய பகுதியான தபால் ஆபிஸ் ரோடு,கலைஞர் நகர் 1,2 சந்து, சாய்பாபா தெரு,பாரதிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கொசுக்கள் மக்களை கடித்து குதறுகிறது. வீடுகளுக்குள் வராமல் தடுக்க கொசு தடுப்பு மிஷின்களை பயன்படுத்தினாலும் எந்த பயனும் இன்றி மக்கள் இரவில் துாக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர்.ரோடுகள் முறையாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. பழைய எம்ளாய்மென்ட் ஆபீஸ் ரோடு நடப்பவர்களின் பாதத்தையே பழுது பார்க்கும் அளவிற்கு உள்ளது. இந்தரோட்டில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்குகிறது . சாக்கடையில் செடிகள் வளர்ந்துள்ளன. கிழக்கு தெருவில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறன்றனர். வார்டின் பிரதான பிரச்னையாக தண்ணீர் உள்ளது . குடி தண்ணீர் குழாய்கள் பெரும்பாலும் இல்லை. வீட்டுக் குழாய்களில் வரும் தண்ணீர் மட்டும் தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். வீட்டுக் குழாய் வைத்திருப்போரின் வீடுகளில் மற்றவர்கள் ஒரு குடம் தண்ணீருக்காக நிற்பதை பார்க்க முடிகிறது. மாநகராட்சி குடிநீர் வண்டிகள் இப்பகுதிகளுக்கு வருவதில்லை என்று குற்றசாட்டும் உள்ளது. இதர பயன்பாடுகளுக்கு பயன்படும் உப்பு தண்ணீர் டேங்குகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

கொசு மருந்து அடியுங்க


சாந்தி, பாரதிபுரம் முதல் சந்து : தெருவின் நடுவே ஓடும் சாக்கடை நீர் அப்படியே நிற்கிறது. அடைப்புகள் சரிசெய்யப்படுவதில்லை. இதனால் கொசுத்தொல்லை உள்ளது. மழை பெய்யும் போது கழிவுகள் சாக்கடைக்குள் புகுந்து அடைப்புகளை ஏற்படுத்துகிறது. கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளதால் வாரத்திற்கு இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.

தண்ணீருக்காக அலைகிறோம்


முருகேசன், பழைய எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் ரோடு : குடிதண்ணீர் குழாய்கள் அனைத்து வீடுகளிலும் கிடையாது. வீட்டுக் குழாய்கள் வைத்திருப்போரிடம் கேட்டுதான் பெற வேண்டி இருக்கிறது. நல்ல தண்ணீருக்கு மாற்று வழி இல்லை. உப்பு தண்ணீர் டேங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மாநகராட்சி குடி தண்ணீர் வந்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். தண்ணீர் தேடி அலைய வேண்டிய சூழல் இருக்கிறது.

சாக்கடை, ரோடு பிரச்னை


சகிதாபானு, போஸ்ட் ஆபீஸ் ரோடு : சாக்கடையில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதில் செடி வேறு வளர்ந்திருக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள், கோயிலுக்கு வருவோர் என பலரின் பயன்படுத்தும் பகுதியாக இது இருக்கிறது. சிறு மழை பெய்தால் கூட சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. புதிய ரோடுகள் அமைக்க வேண்டும்.

விரைவில் பணிகள்


சுபாஷினி, கவுன்சிலர் (தி.மு.க., ) : 47 வது வார்டை பொறுத்தவரையில் குறைகள் தெரியவந்தால் உடனடியாக சரிசெய்யப்படுகிறது. பழைய எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் ரோட்டில் சாக்கடை பாலம் கட்டும்போது குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

இதனை சரிசெய்து புதிய குழாய் பொருத்தப்படவுள்ளது. அனைத்து இடங்களிலும் புதிய பாலம் கட்டும் பணிக்கு திட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க வலியுறுத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us