/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய தாய், மகள்
/
அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய தாய், மகள்
ADDED : ஆக 15, 2024 05:00 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாய், மகள் அங்கிருந்த லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டனர்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்75.
உடல்நலம் பிரச்னையால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர் உடன் மகள் பழனியம்மாள் உள்ளார்.
பஞ்சவர்ணத்திற்கு ஸ்கேன் எடுப்பதற்காக 2வது மாடியிலிருந்து முதல் மாடிக்கு பஞ்சவர்ணமும்,பழனியம்மாள் இருவரும் லிப்டில் வந்தனர்.
இடையில் லிப்ட் சிக்கியது. இருவரும் கூச்சலிட்டனர்.
தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டனர். மருத்துவமனையில் அடிக்கடி நோயாளிகள் லிப்டில் சிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மருத்துவமனை நிர்வாகத்தினர் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.