/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தையை புதரில் வீசிய தாய் கைது
/
குழந்தையை புதரில் வீசிய தாய் கைது
ADDED : மே 16, 2024 05:43 AM
வேடசந்துார் : வேடசந்துார் பூதிபுரத்தில் பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார்.
பூதிபுரம் பூதிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி வடிவேல் .இவருக்கு மனைவி கன்னியம்மாள் 42, குழந்தைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குழந்தைகளை கவனித்து வந்த கண்ணியம்மாள் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பூதிபுரத்திற்கு வந்தார்.
வந்ததிலிருந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்தார். இந்நிலையில் பூதிபுரம் சீத்தப்பட்டி ரோட்டில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்த நிலையில் இறந்து கிடந்தது.
போலீசார் விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்து முள் புதரில் வீசியது கண்ணியமாள் என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து அவரை கூம்பூர் போலீசார் கைது செய்தனர்.