/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...
/
சேதமான ரோடுகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...
ADDED : ஏப் 24, 2024 12:31 AM

பிளக்ஸ் போர்டுகளால் அவதி
வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் தென்னம்பட்டியிலிwருக்கும் பஸ் ஸ்டாப்பை மறைத்து சிலர் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். பிளக்ஸ் போர்டு வைப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம், வடமதுரை.-----....
சேதமான கட்டடத்தால் அச்சம்
நத்தம் ஆவிச்சிபட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், பள்ளி சிறுவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சேதமான கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வேண்டும். போஸ், ஆவிச்சிபட்டி.-----
.....
சேதமான ரோடால் தடுமாறும் மக்கள்
ஆத்துார் தாலுகா ஆபிஸ் முன்பு ரோடு சேதம் அடைந்துள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரன், ஆத்துார்.-----
........
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல்- பழநி ரோட்டில் பல நாட்களாக அள்ளப்படாமல் இருக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்து குப்பை குவிந்து கிடப்பதால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகானந்தம், திண்டுக்கல்.------
...........
விபத்தை ஏற்படுத்தும் தரைப்பாலம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் தரைபாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் அதிகமாக சென்று வரும் பாதை என்பதால் தரை பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ராஜ், திண்டுக்கல்.-------........
குளத்தில் கலக்கும் கழிவுகள்
திண்டுக்கல் அருகே செட்டிகுளத்தில் கழிவு நீர் களப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குளத்தில் கழிவுநீர் பிளாஸ்டிக் கலந்த குப்பையை கொட்டுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி, திண்டுக்கல்.-------
........
வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் பாலம்
பழநி காமராஜ் நகரில் சாக்கடை தரைபாலம் சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிலர் கீழே விழுகின்றனர். பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமு, பழநி.------
..................................................

