/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரிவான பாதையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
சரிவான பாதையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 13, 2024 05:51 AM

சேதமான ரோடால் விபத்து
திண்டுக்கல் -திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் இருந்து காந்திஜி நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. மழைநீர் தேங்கி குளம் போல் நிற்பதால் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் விழுகின்றனர் .ரோட்டை சீரமைக்க வேண்டும்.கார்த்திகேயன், காந்திஜிநகர்............
மின்கம்பத்தால் விபத்து
திண்டுக்கல் பாறைப்பட்டி நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தால் விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் மின்கம்பம் தெரியாமல் மேதி விழுகின்றனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்குமார், திண்டுக்கல்.
..................--------தாழ்வாக செல்லும் கேபிள் ஒயர்
திண்டுக்கல் கே. ஆர். நகரில் கேபிள் ஒயர்கள் தாழ்வாக தொங்கி கொண்டு உள்ளதால் இரவில் நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழுத்தில் சுற்றி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் ஒயரை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதி, திண்டுக்கல்.
...................--------சரிவான பாதையில் இல்லை ரோடு
ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் இருந்து தும்மிச்சம்பட்டி புதுார் செல்லும் ரோட்டின் தொடக்கத்தில் உள்ள சரிவான பகுதியில் ரோடு அமைக்காததால் டூவீலர்,சைக்கிளில் செல்வோர் விபத்தினை சந்திக்கும் நிலை தொடர்கிறது . தார் ரோடு அமைக்க வேண்டும் சரவணன்,ஒட்டன்சத்திரம்.
.......--------
சரக்கு வாகனங்களால் அபாயம்
கோபால்பட்டியில் இருந்து அதிகாரிப்பட்டி செல்லும் சாலையில் சரக்கு வாகனங்களில் அதிக அளவு ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவிந்த் குமார், கன்னியாபுரம்.
..................---------குப்பையை கொட்டி தீவைப்பு
திண்டுக்கல் லாரி பேட்டையில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .அப்பகுதி முழுவதும் புகை மண்டலமும் ஏற்படுகிறது .அருகில் குழந்தைகள் மையம் உள்ளதால் உடனுக்குடன் அகற்ற வேண்டும்.சுரேஷ்குமார், திண்டுக்கல்.................---------
கால்வாயில் அடைப்பு
வடமதுரையில் நான்குவழிச்சாலை நால் ரோடு சந்திப்பு பகுதி பாலத்தில் பிளாஸ்டிக் வாட்டர் கேன், மதுப்பாட்டில்கள், குப்பை சேர்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாய்க்கால் பாதையும் அடைப்பட்டு நீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மனோகரன், வடமதுரை.
.....................-