/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடர் மின்தடையால் இருளில் மலை கிராமங்கள்
/
தொடர் மின்தடையால் இருளில் மலை கிராமங்கள்
ADDED : ஜூலை 27, 2024 06:44 AM
தாண்டிக்குடி, : தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடரும் மின்தடையால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
தாண்டிக்குடி உள்ளிட்ட 50 க்கு மேற்பட்ட மலைப்பகுதிக்கு கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மின்சப்ளை அளிக்கப்படுகிறது. இந்த சப்ளையில் பிரச்னை ஏற்படும் நிலையில் மாற்று சப்ளையாக வத்தலக்குண்டு, செம்பட்டியிலிருந்து சப்ளை அளிப்பது வழக்கம். இரு வாரமாக மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் சாரல் நீடிக்கிறது. இதனால் மின்பாதையில் மரங்கள் விழுந்து இடையூறு ஏற்படுகிறது. இடையூறுகளை சீர் செய்ய பண்ணைக்காடு, தாண்டிக்குடி மின் அலுவலகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் நாள் கணக்காக மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மின்தடை குறித்து புகார் அளித்தும் இவ்விரு அலுவலக அதிகாரிகள் அலட்சியத்துடன் பதிலளிக்கின்றனர். மூன்று சப்ளையிலும் இரு வாரமாக அவ்வப்போது நொடி பொழுதில் தலை காட்டும் மின்சாரம் மணிக்கணக்கில் வராத நிலையே நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் ,அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் பாதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதியில் நீடிக்கும் மின்தடைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.