/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரவில் தொடரும் மின்தடை இருளில் மலை கிராமங்கள்
/
இரவில் தொடரும் மின்தடை இருளில் மலை கிராமங்கள்
ADDED : ஆக 07, 2024 06:08 AM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் இரவில் தொடரும் மின்தடையால் மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
தாண்டிக்குடி கீழ்மலை பகுதியில் சாரல் மழைக்கே இரவில் மின்தடை ஏற்படுவதால் மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கின்றன. இதை மறுநாளே சீர்செய்யும் நிலை உள்ளது. மின்தடை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் நிலையில் அதிகாரிகள் அலட்சியத்துடன் பதிலளிக்கின்றனர்.
மூன்று சப்ளை வரும் மின்பாதையில் இடையூறுகள் அகற்றாத நிலையே இதற்கு காரணமாக உள்ளது. நொடி பொழுதில் தலை காட்டும் மின்சாரம் மணிக்கணக்கில் வராத நிலையே உள்ளது. இப்பிரச்னையை சீர் செய்ய கீழ் மலையை மையமாக கொண்டு துணை மின்நிலையம் அமைக்கும் திட்டம் 3 ஆண்டாக கானல் நீராக உள்ளது. மலைப்பகுதியில் நீடிக்கும் மின்தடைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.