/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி
/
மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி
ADDED : மே 03, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுவாமி சாட்டுதலுடன் ஏப்.23 ல் தொடங்கிய திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் ,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
மே 1 அதிகாலை அம்மன் வானவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் பவனி வர கோயில் வந்தடைந்தது. இதன்பின் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் , கிடாய் வெட்டுதல் என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாறுவேடத்துடன் மஞ்சள் நீராடுதலும் நடந்தது.