/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் மாநாடு கண்காட்சி நிறைவு
/
முருகன் மாநாடு கண்காட்சி நிறைவு
ADDED : ஆக 31, 2024 06:07 AM

பழநி : பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைக்கப்பட்ட கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக. 24,25 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு வடிவிலான முருகன், விநாயகர் அருணகிரிநாதர், சிவன், பார்வதி சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
முப்பரிப்பான திரையரங்கம், மேய்நிகர் திரையரங்கம் ஆகியவற்றில் முருகன் பெருமைகள் குறித்த பாடல்கள் ,ஆறுபடை வீடுகளின் அமைப்புகள் காண்பிக்கப்பட்டது.
இதோடு முருகன் கோயில்களின் புகைப்படமும் அமைக்கப்பட்டு இருந்தது .
மாநாடு முடிந்த பிறகும் ஐந்து நாட்கள் கண்காட்சி செயல்படும் என ஹிந்து அறநிலை துறை அறிவித்திருந்தது. அதன்படி ஐந்து நாட்களும் பொதுமக்கள் பார்வையிட்டனர். கடைசி நாளான நேற்று பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
இதனால் கண்காட்சி பந்தலில் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.