/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 27, 2024 06:18 AM

சாணார்பட்டி : சாணார்பட்டி ஆசாரிபுதுார் முத்து மாரியம்மன், விநாயகர், முனியப்பன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி நேற்று முன்தினம் திருச்செந்துார், அழகர் கோயில்,காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள்,முளைப்பாரி ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, திக்குபந்தனம் மிருச்சங்கிரணம்,மூலமந்திரம் ஜெபஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது.
நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

