/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூட்டு முயற்சியால் தரச்சான்று எம்.வி.எம்., கல்லுாரி முதல்வர் பெருமிதம்

ADDED : ஆக 08, 2024 05:23 AM

திண்டுக்கல்: ''ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து செயல்பட்டதால்தான் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஏ பிளஸ் சான்று கிடைத்ததாக ,'' திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரி முதல்வர் ரேவதி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு தொடர்ந்து அதன் மதிப்பீடு பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கல்லுாரிகளில் திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரிக்கு மட்டும் ஏ பிளஸ் சான்று கிடைத்திருக்கிறது. இது கூட்டு உழைப்புக்காக கிடைத்த வெற்றி.
மாணவிகளின் நலனில் அனைத்து பேராசிரியர்களும் அக்கறை செலுத்துகின்றனர். ஏழை மாணவிகள் தான் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு எந்தவித குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம்.
மாணவிகளின் ஒத்துழைப்பும் அதிகளவில் உள்ளது.
கல்லுாரி வளாகம் என வந்துவிட்டால் படிப்பை தவிர வேறு எதையும் சிந்திக்காமல் முழு கவனத்துடன் மாணவிகள் செயல்படுகின்றனர்.
அதனால்தான் தேர்ச்சி விகிதம் முழுமையாக இருக்கிறது. ஒழுக்கம், படிப்பு, உடற்கல்வி, இதர திறமைகள் அனைத்திலும் மாணவிகள் சிறப்பாக செயல்படுவதற்கான பரிசாக இந்த தரச்சான்று கிடைத்துள்ளது என்றார்.