ADDED : ஆக 31, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத், துணை த்தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர்.தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார்.
நத்தம் பஸ்ஸ்டாண்ட் கட்டண இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ரூ.13 .50 லட்சம் மதிப்பில் தளம் அமைத்து சிமென்ட் கூரை அமைத்தல், பொது மயான மேம்பாடு பணிகளுக்கு ரூ.6 .30 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துப்புரவு பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.