/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம்..சுதந்திர தின விழா கொண்டாட்டம்
/
நத்தம்..சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2024 05:05 AM
நத்தம்: நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி உதயசூரியா தேசிய கொடியேற்றினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார்.
நத்தம் யூனியன் அலுவலகம் முன் ஒன்றியகுழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கொடியேற்றி காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தினார். யூனியன் ஆணையாளர்கள் மகுடபதி, துணைதலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கி கொடியேற்றினார். செயல்அலுவலர் விஜயநாத், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் பங்கேற்றனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ராமசாமி கொடியேற்றினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணக்குமார், நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அம்சராஜன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் ஜெயசீலன்,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் ஆகியோர் தலைமையில் தேசிய கொடி ஏற்றபட்டது.