ADDED : ஏப் 26, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் சிறுமலையில் நடந்தது.
வனப்பாதுகாவலர் காஞ்சனா, முதன்மை கல்வி அலுவலர் நஸாருதீன், உதவி வனப்பாதுகாவலர் வேல்மணி நிர்மலா துவக்கி வைத்தனர். இயற்கை,பல்லுயிர்களை கண்டு ரசிக்கும் வகையில் மாணவர்கள் சிறுமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஏற்பாடுகளை சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன்,பசுமை தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகி ஜெயக்குமார் செய்திருந்தனர்.

