/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்.,ல் என்.சி.சி., பயிற்சி
/
என்.பி.ஆர்.,ல் என்.சி.சி., பயிற்சி
ADDED : ஜூலை 06, 2024 06:06 AM
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., பொறியியல். தொழில்நுட்ப கல்லுாரியில் தமிழ் நாடு என்.சி.சி., பட்டாலியன் சார்பாக 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
திண்டுக்கல், தேனி, மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 450 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி குழும தலைமை அதிகாரி கர்னல் விஜயகுமார் முகாமினை ஆய்வு செய்து மாணவர்களுடன் பேசினார்.
தமிழ்நாடு என்.சி.சி., படைப்பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் தலைமையில் நடந்த போர் ஒத்திகை நிகழ்வில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி இயக்குனர் கார்த்திகைபாண்டியன், பொறியியல் கல்லுாரி முதல்வர் மருது கண்ணன் கலந்து கொண்டனர்.