/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவசியம் முன்னெச்சரிக்கை: வடிகால், சாக்கடைகளை துார் வாரலாமே: மழைநீர் பாதிப்பை தடுக்க வழி காணுங்க

ADDED : ஆக 06, 2024 05:01 AM

மாவட்டத்தில் மாநகராட்சி 1, மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தெருக்கள், ரோடுகளில் உள்ள மழை நீர் வடிகால், சாக்கடைகளில் புல் பூண்டுகள் முளைத்து காணப்படுகின்றன.
வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக போடப்படுவதால் அவை நீரோட்டத்தை அடைத்துக் கொள்கின்றன. சாக்கடைகள் தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்குகிறது. மழை காலத்தில் இவற்றில் இருந்து கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. இதனால் அப்பகுதியில் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவுகிறது. வடிகால்கள், சாக்கடைகள் துார்வாரப்படாமல் இருப்பதால் மழை நன்றாக பெய்யும் போது நீர் வெளியேற வழி இல்லாமல் தெருக்கள், ரோடுகளிலே தேங்கி விடுகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ரோட்டு பகுதிகளில் உள்ள வடிகால்கள் பராமரிப்பின்றி இருப்பதால் பெய்யும் மழை நீரானது வடிகால் செல்லாமல் வழியிலே தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் வடிகால் உயரமாகவும் ரோடு தாழ்வாகவும் உள்ளதால் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ளது. ரயில்வே சப்வேக்களில் மழை நீர் வடிவதற்கு சரியான கட்டுமானம் இல்லாததால் மழை காலத்தில் சப்வேக்களில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டுப் பகுதிகளில் உள்ள வடிகால் அமைப்புகளை சீரமைத்து மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.