/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிப்படை வசதிகளில் அலட்சியம் பண்ணைப்பட்டியில் கருப்புக்கொடி
/
அடிப்படை வசதிகளில் அலட்சியம் பண்ணைப்பட்டியில் கருப்புக்கொடி
அடிப்படை வசதிகளில் அலட்சியம் பண்ணைப்பட்டியில் கருப்புக்கொடி
அடிப்படை வசதிகளில் அலட்சியம் பண்ணைப்பட்டியில் கருப்புக்கொடி
ADDED : ஏப் 14, 2024 06:33 AM
சின்னாளபட்டி: அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அலட்சியத்தை கண்டித்து முன்னிலைக்கோட்டை பண்ணைப்பட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
ஆத்துார் ஒன்றியம் முன்னிலைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பண்ணைப்பட்டியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில் குடிநீர், பஸ் போக்குவரத்து, மயானம், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சில நாட்களாக முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள், வி.ஐ.பி.,க்களுடன் இங்கு பிரசாரத்தை முடித்து சென்றனர்.
இச்சூழலில் அடிப்படை வசதிகள் சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள அலட்சியத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராமத்தின் மத்திய பகுதியில் அறிவிப்பு போர்டு அமைத்தனர். இதனை அகற்றும்படி சிலர் மிரட்டினர். அதிருப்தியடைந்த கிராமத்தினர் வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியினர் கூறுகையில், 'தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் அரசியல் பிரமுகர்கள் போலீசாருடன் வந்து அகற்றும்படி கொலை மிரட்டல் விடுத்தனர். கிராமத்திற்கென பல திட்டப்பணிகள் ஏட்டளவில் மட்டுமே நடந்துள்ளது. முழுமையாக பணிகள் நிறைவு செய்யும் வரை இந்த முடிவில் இருந்து பின்வாங்க வாய்ப்பில்லை ' என்றனர்.
பி.டி.ஓ., அருள்கலாவதி பேச்சுவார்த்தை நடத்தி வசதிகளுக்கு துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் அறிவிப்பு போர்டு, கருப்பு கொடிகள் மாலை வரை அகற்றப்படவில்லை.

