/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடியில் புதிய பூ மார்க்கெட்
/
திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடியில் புதிய பூ மார்க்கெட்
திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடியில் புதிய பூ மார்க்கெட்
திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடியில் புதிய பூ மார்க்கெட்
ADDED : ஆக 22, 2024 03:42 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடி மதிப்பில் 54 கடைகளுடன் லிப்ட்,கழிப்பறை,டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்கின்றனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள சில்லரை வியாபாரிகளிடம் கொடுக்கின்றனர். மாத வாடகையாக மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள கடைக்காரர்களிடம் வரி வசூலிக்கிறது.
பூ மார்க்கெட்கட்டி பல ஆண்டுகளை கடந்தநிலையில் முறையாக டூவீலர் பார்க்கிங்,கழிப்பறை,குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் உள்ளது.
வியாபாரிகளும் பூ மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும் என கோரி வந்தனர். மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு தெரியப்படுத்த , திண்டுக்கல்லில் ஏற்கனவே செயல்படும் பூ மார்க்கெட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.5.50 கோடியில் 54 கடைகள்,2 இடங்களில் லிப்ட்,கழிப்பறை,டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் பூ மார்க்கெட் அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இதை தொடர்ந்து பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தி தற்காலிக பூ மார்க்கெட் எங்கே நடத்துவது என கருத்து கேட்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஒத்துழைப்பு வழங்கியதை தொடர்ந்து புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கும் என கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.