sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சிலவரிகளில்.....

/

செய்தி சிலவரிகளில்.....

செய்தி சிலவரிகளில்.....

செய்தி சிலவரிகளில்.....


ADDED : மே 10, 2024 05:47 AM

Google News

ADDED : மே 10, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரத்ததான முகாம்

பழநி: பழநி அரசு மருத்துவமனையில் செயல்படும் குருதி வங்கியில் உலக மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பழநி தங்க ரத அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. 15 நபர்கள் ரத்தம் வழங்கினர். பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் பங்கேற்றனர்.

நீர் மோர் பந்தல் திறப்பு

சாணார்பட்டி:-சாணார்பட்டி விராலிப்பட்டியில் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். பட்டியல் அணி மாவட்ட செயலாளர் வடிவேல், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, மாவட்ட பொது செயலாளர் சொக்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனபால் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நீர்மோர்,தர்பூசணி, சப்போட்டா, இளநீர், பலாப்பழம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிர்வாகி ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.

கொடைக்கானலுக்கு 5111 வாகனங்கள்

திண்டுக்கல்:கொடைக்கானல் வருகை தரும் வெளி மாநில,மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நேற்று மதியம் 3:00 மணி நிலவரப்படி 2,74,211 பயணிகள் 1,129 பஸ்களிலும், 28,804 கார்களிலும், 1,207 மினி பஸ்களிலும், 6,830 டூவீலர்களிலும், 3,205 வேன் , 1,486 இதர வாகனங்கள் என மொத்தம் 42,661 வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் பதிவு செய்து பெற்றுள்ளனர். மொத்தமாக இ-பாஸ் அமல்படுத்தப்பட்ட மே.7 முதல் நேற்று மதியம் வரை 5,111 வாகனங்களில் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us