/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொதிக்கும் வெயில் அங்கன்வாடிகளுக்கு இல்லை விடுமுறை
/
கொதிக்கும் வெயில் அங்கன்வாடிகளுக்கு இல்லை விடுமுறை
கொதிக்கும் வெயில் அங்கன்வாடிகளுக்கு இல்லை விடுமுறை
கொதிக்கும் வெயில் அங்கன்வாடிகளுக்கு இல்லை விடுமுறை
ADDED : மே 05, 2024 04:33 AM
வேடசந்துா : அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கொதிக்கும் வெயில்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு முறையான விடுமுறை விடாமல் அங்கன்வாடி மையங்களை நடத்துவது பொதுமக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெயில் உச்சத்தை கடந்து கொதிக்கிறது. அக்னி வெயில் காலத்தில் மக்கள் 11:00 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடுமையான வெப்ப காற்று வீசும் நிலையில் அரசு பள்ளிகளுக்கு ஏப்.27 முதல் மே கடந்து ஜூன் 5 முடிய விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அங்கன்வாடி மையங்களை விடுமுறை அளிக்காமல் நடத்தி வருகின்றனர். 2 முதல் 5 வயது வரை உள்ள அங்கன்வாடி சிறு குழந்தைகள் வெயிலால் பாதிக்கின்றனர்.
2023ல் அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து 15 நாள் விடுமுறை விடப்பட்டது. நடப்பு ஆண்டில் இன்னும் அங்கன்வாடி மையங்கள் நடந்து வருகின்றன.
அக்னி வெயில் கொளுத்தும் மே மாதத்தில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்குவிடுமுறை , தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அங்கன்வாடி மையங்கள் மட்டும் இன்றும் செயல்படுகிறது. இது அரசின் கவனத்திற்கு எட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.