/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டல்களில் இல்லை புகார் எண் அறிவிப்பு ஓகே ... செயல்பாட்டில் பூஜ்ஜியம்
/
ஓட்டல்களில் இல்லை புகார் எண் அறிவிப்பு ஓகே ... செயல்பாட்டில் பூஜ்ஜியம்
ஓட்டல்களில் இல்லை புகார் எண் அறிவிப்பு ஓகே ... செயல்பாட்டில் பூஜ்ஜியம்
ஓட்டல்களில் இல்லை புகார் எண் அறிவிப்பு ஓகே ... செயல்பாட்டில் பூஜ்ஜியம்
ADDED : ஜூன் 13, 2024 07:02 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் உணவு சார்ந்த ஓட்டல்கள் , பேக்கரிகளில், கலப்படம், தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் எண் காட்சிப்படுத்தாமல் உள்ளது.
கலப்படம் , தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், பேக்கரிகள் ,டீ கடைகளில், கலப்படம் குறித்த புகார் தெரிவிக்கும் எண் எங்கும் வைக்கப்படவில்லை.
தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது: சில உணவகங்கள், பேக்கரிகளில், உணவுப் பொருட்களின் தரம் குறைவாகவே உள்ளது.நீண்ட நாள் ஒரே சமையல் எண்ணெய் பயன்பாடு, சுகாதாரமற்ற சமையலறை என பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. கேள்வி எழுப்பினால் கடை உரிமையாளர்கள் முறையாக பதில் அளிக்காமல் எதிர்கேள்வியால் வாடிக்கையாளர்களை மிரட்டுகின்றனர்.
பெரும்பாலான கடைகளில், உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிக்கும் எண் இல்லாததால் ,வாடிக்கையாளர்களோ, சமூக ஆர்வலர்கள் சண்டையிடாமல் புகார் தெரிவிக்க முடியவில்லை . இதை தவிர்க்க உணவு குறித்து புகார் வாட்ஸ் ஆப் எண் கடமைக்கு இல்லாமல் முறையாக ஓட்டல்களில் உள்ளதா என்பதை உணவு துறைஅதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.