ADDED : ஏப் 20, 2024 05:51 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு ஐ.டி.எப்.சி., பஸ்ட் பேங்க் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது.
அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் தலைமை வகித்தார். என்.பி.ஆர்., கல்விக்குழும துணை வேலைவாய்ப்பு அலுவலர் லில்லியன் கலந்து கொண்டார். ஐ.டி.எப்.சி., பாங்க் மண்டல மனித வள மேலாளர் அருண் பாண்டியன், மனிதவள மேலாளர் மதன் தேர்ந்தெடுத்தனர். தேர்வான 41 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
