/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
/
அரசு பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 03, 2024 04:51 AM
சின்னாளபட்டி : தினமலர் செய்தி எதிரொலியாக அரசு பஸ் இயக்கத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர்.
ஆத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அரசு பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவது தொடர்பாக ஆக.28ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து இயக்குதல் மேலாளர் மதன்கார்த்திக் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ரோடு சேதம், நீண்ட மரக்கிளைகள் பிரச்னையால் அரசு பஸ் இயக்கத்தில் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படாத நிலையில் கன்னிவாடி-குட்டத்துப்பட்டி தடத்தில் 20 டிரிப்கள் அரசு பஸ் இயக்கப்படுவதாக பொது மேலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சின்னாளபட்டியில் பயணிகளை புறக்கணித்து சென்ற அரசு பஸ், டீசல் தீர்ந்து ரெட்டியார்சத்திரத்தில் பாதி வழியில் நின்ற பஸ் குறித்து நேற்று (செப்.2) படங்களுடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் உள்ள வீடுகள், தனியார் கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து சென்றனர்.