/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சக்தி கல்லுாரி, அக் ஷயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
/
சக்தி கல்லுாரி, அக் ஷயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
சக்தி கல்லுாரி, அக் ஷயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
சக்தி கல்லுாரி, அக் ஷயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 14, 2024 05:25 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு கேரள நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
கணினி அறிவியல் துறை தலைவர் கவிதா , பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையின் முக்கிய நிகழ்வான வாமணன் அவதாரமும் மகாபலியை மீண்டும் வரவேற்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது.
மாணவர்கள் பூக்கோலமிட்டு, குழு நடனம் ஆடி, ஓணம் பாடல்களை பாடினர்.