/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓணம், முகூர்த்தத்தால் விலை உயர்ந்த பூக்கள்; மல்லிகை கிலோ ரூ.2500
/
ஓணம், முகூர்த்தத்தால் விலை உயர்ந்த பூக்கள்; மல்லிகை கிலோ ரூ.2500
ஓணம், முகூர்த்தத்தால் விலை உயர்ந்த பூக்கள்; மல்லிகை கிலோ ரூ.2500
ஓணம், முகூர்த்தத்தால் விலை உயர்ந்த பூக்கள்; மல்லிகை கிலோ ரூ.2500
ADDED : செப் 15, 2024 12:43 AM
திண்டுக்கல்: ஓணம் பண்டிகை, முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.2500 வரை விற்பனையானது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது.
இங்கிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்கின்றனர்
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று 30 டன் வாடாமல்லி, செண்டுமல்லி, அரளி உள்ளிட்ட பூக்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ரூ.1500க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.2500க்கு விற்பனையானது.
கனகாம்பரம் ரூ.2000, செவ்வந்தி ரூ.150, முல்லை ரூ.700, ஜாதிப்பூ ரூ.500, சம்பங்கி ரூ.280, அரளிரூ.100, செண்டுமல்லி ரூ.30, கோழி கொண்டை ரூ.60, ரோஜா ரூ.200, வாடாமல்லி ரூ. 60, காக்கரட்டான் ரூ.600, விருச்சிபூ ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.400, மரிக்கொழுந்து ரூ.100க்கு விற்பனையானது.