/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஒரு கோடி முறைகேடு
/
திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஒரு கோடி முறைகேடு
திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஒரு கோடி முறைகேடு
திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஒரு கோடி முறைகேடு
ADDED : ஜூலை 10, 2024 02:17 AM
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் பெயரில் ரூ. 1 கோடி முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளராக இருந்த சதாசிவம் ஒராண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றார். கே.சி.பட்டியில் பணியாற்றிய பால்பாண்டி செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் மீது புகார்கள் எழுந்ததால் இதே வங்கியில் பணியாற்றிய பிரபாகரன் செயலராக நியமிக்கப்பட்டார்.
தற்போது செயலாளராக தும்மலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலராக பணியாற்றி வரும் சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆண்டுகளாக இந்த சங்கத்தில் 1100 விவசாயிகள், பொதுமக்கள் ரூ. 6 கோடி நகை கடன் பெற்றுள்ளனர். கே.சிங்காரகோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயலட்சுமி ரூ. 30 ஆயிரத்திற்கு நகை கடன் பெற்றிருந்தார். அதை மீட்க பணத்தை செலுத்தி நகையை கேட்டுள்ளார். நகையை கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் கலெக்டரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து ரெட்டியார்சத்திரம் வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கள அலுவலர் பொன்னுச்சாமி விசாரணை நடத்தினார். அதில் ரூ. 50 ஆயிரம், ஒரு லட்சம் பணம் பெற்றவர்கள் பெயர்களில் ரூ.2 முதல் 3 லட்சம் வரை கடன் பெற்றதாக கணக்கு எழுதி அந்தத் தொகையை முறைகேடு செய்ததாக தெரியவந்தது. அடகு வைக்கும் நகைகளுக்கு ரசீதும் வழங்குவதில்லை.
இதன்படி இரண்டு ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அரசு நகை கடன் தள்ளுபடியின் போது பெரும்பாலான பயனாளிகளிடம் செலவு தொகை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையைப் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்தும்விசாரணை நடக்கிறது.
பொன்னுச்சாமி கூறியதாவது: முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட செயலாளர் சதாசிவம் ஓய்வு பெற்று விட்டார். அடுத்தடுத்து செயலராக பணியாற்றிய பால்பாண்டி , பிரபாகரன் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சதாசிவம் ,பிரபாகரனிடம் இருந்து ரூ. 10 லட்சம் வரை மீட்டுள்ளோம். மீதி தொகை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.