ADDED : ஏப் 22, 2024 04:56 AM

குப்பையால் உருவாகும் சீர்கேடு
* திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்நடை இங்குள்ள குப்பையை உண்ணுவதால் பாதிக்கப்படுகின்றன. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகுமாரி, திண்டுக்கல்.
செடிகள் படர்ந்த மின்கம்பம்
*ரெட்டியார்சத்திரம் அருகே எல்லப்பட்டி ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர். செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவேல், ரெட்டியார்சத்திரம்.
தண்ணீரால் சேதமாகும் ரோடு
*கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் ரோட்டில் குழாய் உடைந்து நாள்தோறும் தண்ணீர் வீணாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரோடு சேதமடைந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் தண்ணீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திக், கொடைக்கானல்.
எழுத்துக்கள் அழிந்த பெயர்பலகை
* ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் பரப்பலாறு அணை நுழைவுப் பகுதி அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர்கள் குறித்த அறிவிப்பு பலகை உள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் அழிந்துள்ளதால் மக்கள் தடுமாறுகின்றனர். இதை சரி செய்ய வேண்டும். -சீனிவாசன் ஒட்டன்சத்திரம்
சேதமான பாலத்தால் ஆபத்து
*திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு சாக்கடை தரை பாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் சாக்கடை பாலத்தை சரி செய்ய வேண்டும். குமார், திண்டுக்கல்
கூரை இல்லாத ரேஷன்
* வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் செயல்படும் ரேஷன் கடையில் கூரை கட்டமைப்பு இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் மக்கள் வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. கூரை அமைக்க வேண்டும். பாண்டி, வடமதுரை.
திறந்தவெளியில் கால்வாய்
* திண்டுக்கல் நல்லாம்பட்டியில் சாக்கடை கால்வாய் திறந்த வெளியில் உள்ளதால் கால்வாய்க்குள் பிளாஸ்டிக் கலந்த குப்பை அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்வாயை துார்வாரி பள்ளத்தை மூட வேண்டும். கண்ணன், நல்லாம்பட்டி.
..................................
