/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுதந்திர விருந்தினர் இல்லம் திறப்பு
/
சுதந்திர விருந்தினர் இல்லம் திறப்பு
ADDED : செப் 09, 2024 04:32 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் - - திருச்சி ரோட்டில் கூட்டுறவு நகரில் சுதந்திர விருந்தினர் இல்ல திறப்பு விழா நடந்தது.
மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் தலைமை வகித்து திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஹவுஸ் பாஷா, மதுரை மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் உதயகுமார், முபாரக் மந்திரி, முன்னாள் தெற்கு மண்டல தலைவர் கோபிநாத், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல். ராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
விருந்தினர்களை சுந்தரா விருந்தினர் இல்ல நிர்வாக இயக்குனர் பிரேமச்சந்திரன், மோகனா பிரேமச்சந்திரன், ஹர்த்தி கேஸ் வரவேற்றனர்.
கோல்டு டச் கலெக் ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம், திருப்பூர் அரசு ஒப்பந்தக்காரர் செந்தில்குமார், உமா கேபிள் டி.வி. உரிமையாளர் சுரேஷ், மு.க.அழகிரி பேரவை நிர்வாகிகள் முரளி, சுகுமார், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அரசு கூடுதல் வழக்கறிஞர் பாலமுருகானந்தம், தொழிலதிபர் தாமஸ் பீட்டர், ஜே.கே.,டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெகதீஷ், ஏ.கே.எம்.ஜி., குரூப்ஸ் உரிமையாளர் கணேஷ் பிரபு, ஜெயம் மார்க்கெட்டிங் உரிமையாளர் சுரேஷ் பாபு, எஸ்.பி., சூர்யா எலெக்ட்ரிக்கல் உரிமையாளர் கோபி சாந்த், ஸ்ரீ ராம்ஜி டிரேடர்ஸ் உரிமையாளர்கள் கபாலீஸ்வரர், வெங்கடேஷ் பங்கேற்றனர். நிர்வாக இயக்குனர் பிரேமச்சந்திரன் கூறுகையில், இல்லத்தில் குடும்பத்துடன் தங்கிக் கொள்ளவும், சிறிய மீட்டிங் ஹால், குழந்தைகள் பொழுது போக்குவதற்கும், அனைத்து அறைகளும் குளிர் ஊட்டப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது,