ADDED : மே 01, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : திண்டுக்கல்- - வத்தலக்குண்டு ரோட்டில் ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
ஊராட்சி தலைவர் உலகநாதன், மாணவரணி நிர்வாகி அரவிந்தன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜ கணேஷ், அரசு ஒப்பந்ததாரர்கள் மெல்வின், ஜீசஸ் அகஸ்டின், விக்னேஷ் பங்கேற்றனர்.