/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நற்பணி மன்ற வணிக வளாகம் திறப்பு
/
நற்பணி மன்ற வணிக வளாகம் திறப்பு
ADDED : மார் 10, 2025 05:28 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோட்டில் ஐ.டி.ஐ., எதிர்ப்புறத்தில் குரும்பக்கவுண்டர் சமுதாய நண்பர்கள் நற்பணி மன்ற வணிக வளாகம் திறக்கப்பட்டது.
மன்ற தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மகாலட்சுமி அண்ட் கோ கமிஷன் மண்டி நிர்வாகி முத்துச்சாமி முன்னிலை வைத்தார். ஆசிரியர் வேல்முருகன் விருந்தினர்களை வரவேற்றார்.
காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் முன்னாள் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் குமார், திண்டுக்கல் மருத்துவமனை முன்னாள் தலைமை மருந்தாளுநர் வீரமணி, தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, அ.தி.மு.க., தலைமை பேச்சாளர் மல்லன் ஆகியோர் வணிக வளாகத்தை திறந்து வைத்தனர். கலைமகள் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகிகள் மாரியப்பன், தினேஷ்குமார்,குழந்தைவேல் ரிலாக்ஸ் உரிமையாளர்கள் குழந்தைவேல், குமரேசன், தினேஷ்குமார், உட்லண்ட்ஸ் பர்னிச்சர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் வீரமணி, பொருளாளர் பெருமாள் செய்ததனர். சங்க துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.