ADDED : ஆக 12, 2024 04:30 AM

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் சைவப் பெருமக்கள் பேரவை திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பெரியசாமி மண்டபத்தை திறந்து வைத்தார்.
மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வ.உ.சி., யின் பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் ஆகியோர் வாழ்த்தினர்.
வீனஸ் பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரீஸ் கதிரேசன், பி.எம். சொர்ணம் பிள்ளை சன்ஸ் வெங்கடேசன், முருகேசன், ஆர்.ஆர். பயர் சொல்யூசன்ஸ் ஆர்.விவேகானந்தன், மீனாட்சி ஸ்டீல்ஸ் உரிமையாளர்கள், பொறியாளர் பூபேஸ்குரு, தி.மு.க., மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், ஜி.எஸ்.ஆர்., ஆதித்யா வேர்ல்டு எல்.கண்ணன், கோவை சபரீஷ் ஹேண்ட்ரய்ல்ஸ் டிசைனர்ஸ் உரிமையாளர்கள், நியு இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் உரிமையாளர்கள், சென்னை கணபதி அசோசியேட்ஸ் உரிமையாளர்கள், ஸ்ரீராம் ஷா மில் உரிமையாளர் அக் ஷய்குமார், ஆறுபடையப்பன் எர்த் மூவர்ஸ் தினேஷ்குமார் பங்கேற்றனர்.