/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிட்கோ அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம், கைது
/
சிட்கோ அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம், கைது
சிட்கோ அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம், கைது
சிட்கோ அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம், கைது
ADDED : ஜூலை 02, 2024 05:58 AM

தொப்பம்பட்டி : பழநி தொப்பம்பட்டி அருகே கொத்தயம் வெடிக்காரன் வலசில் சிட்கோ அமைய எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை போலீசார் கைது செய்தனர்.
வெடிகாரன் வலசு அரளி குத்து குளத்தில் சிட்கோ அமைக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பூலாம்பட்டி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனுார் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கானோரை கைது செய்து தொப்பம்பட்டி பகுதி தனியார் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். மண்டபத்திலிருந்து வெளியே வந்த சிலர் புது தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.