ADDED : பிப் 24, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானலில் ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா , ரோஜா பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, பசுமை குடிலில் ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இவ்வகை பூக்கள் பூத்தலிருந்து ஒரு மாதம் வரை வாடாமல் இருக்கும். இவற்றில் மணம் இல்லாத சூழலில் ஏராளமான வண்ணங்களில் பூத்து அழகுற காட்சியளிக்கும். இவ்வகை கொய்மலர் மூலம் பொக்கே, வீட்டின் முற்றங்களில் அழகு சாதனம் மாடங்களை அலங்கரிக்கும்.
கோடைகாலத்தில் இவை ஏராளமாக பூக்கும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

