/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் மருத்துவமனை விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
/
தனியார் மருத்துவமனை விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : மே 29, 2024 04:26 AM
திண்டுக்கல் : டில்லி மருத்துவமனை தீ விபத்து சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனை முழு விபரங்களை சமர்பிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி தனியார் மருத்துவமனை ஒன்றில் மே 27ல் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் முறையாக அனுமதி பெற்றுள்ளார்களா,கட்டடம் முடிக்கப்பட்ட ஆண்டு,வாகனங்கள் நிறுத்தம் குறித்த வரைபடம்,வெளிப்புற நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து அந்தந்த உள்ளாட்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி திண்டுக்கல் நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கணக்கெடுத்து அதன் நிர்வாகத்திடம் இதற்குரிய நோட்டிஸ் வழங்கி அதன் விபரங்களை அறிக்கையாக பெற வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
நகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பணியில் ஈடுபட்டனர்.நகரில் செயல்படும் 50 மருத்துவமனைகளில் முதல் கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு அறிக்கை சமர்பிப்பதற்கான நோட்டிஸ் வழங்கினர்.
3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.