ADDED : மார் 13, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இயற்கை விவசாயிகளுக்கான தேசிய உயிர்ம உற்பத்தி திட்டம் குறித்து நடந்த கருத்தரங்கில் திண்டுக்கல் தேனி, கரூர் , கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து இயற்கை வேளாண்மை குழுவில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.
உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் சின்னச்சாமி வரவேற்றார். துணை இயக்குனர் ஜோதிலட்சுமி , ஆய்வாளர்கள் சபாபதி ஆய்வாளர் மகேஸ்வரன் பேசினர். அலுவலர் சின்னண்ணன் நன்றி கூறினார். திண்டுக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஆனந்த்குமார், கார்த்திகா பங்கேற்றனர்.