/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் தக்காளி, முருங்கை விலை வீழ்ச்சி
/
ஒட்டன்சத்திரம் தக்காளி, முருங்கை விலை வீழ்ச்சி
ADDED : ஆக 12, 2024 05:06 AM

ஒட்டன்சத்திரம் : வரத்து அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி,முருங்கை விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை, சாலைப்புதுார், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி,இடையகோட்டை சுற்றிய பகுதிகளில் தக்காளி,முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களாக வரத்து தக்காளி, முருங்கை மார்க்கெட்டில் பல மடங்கு அதிகரித்தது. சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.110க்கு விற்றது.
நேற்று சரிவடைந்து கிலோ ரூ.24 க்கு விற்றது. இதே போல் ரூ.50க்கு மேல் விற்ற தக்காளி சரிவடைந்து கிலோ ரூ.15க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், தக்காளி, முருங்கை வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் இனிவரும் நாட்களில் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.