/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம்...சுதந்திர தின விழா
/
ஒட்டன்சத்திரம்...சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:07 AM
*ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சசி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.
துணை தாசில்தார்கள் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், பிரபுசிவசங்கர் பங்கேற்றனர். நகராட்சியில் தலைவர் திருமலைசாமி தேசியக்கொடி ஏற்றினார். பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் நாகசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் அய்யம்மாள் கொடியேற்றினார். துணைத் தலைவர் காயத்ரி தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் டி.எஸ்.பி., முருகேசன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் பட்டாபிராமன், நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் சவும்யா, முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் பாலாஜி, அஜய்குமார் பங்கேற்றனர். காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் துவக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கே.ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி பங்கேற்றனர். ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி தேசிய கொடி ஏற்றினார். செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா பங்கேற்றனர். பட்ஸ் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் பொன்கார்த்திக் பங்கேற்றனர். காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரத்தினம் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். செயலாளர் சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி, அலுவலக மேலாளர் வாணி பங்கேற்றனர். ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில் பள்ளித் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகி வெங்கடாஜலபதி தேசிய கொடி ஏற்றினார். தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் முத்துலட்சுமி பங்கேற்றனர். தொப்பக்காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர் ஆனந்தம் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் வட்டார தேசிய ராணுவ முன்னாள் வீரர்கள் நலச்சங்கம் சார்பாக நடந்த விழாவில் தலைவர் மணி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். பொருளாளர் ரங்கசாமி, செயலாளர் திருமலைசாமி, வழக்கறிஞர் பாரத், உறுப்பினர்கள் பொன்ராஜ், காமராசர், தங்கராஜ், பார்த்தசாரதி, சவடமுத்து, முத்துசாமி, செந்தில்குமார், துணைச் செயலாளர் ஜான்சன் பங்கேற்றனர். தேவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கலையரசி தேசிய கொடி ஏற்றினார் செவிலியர்கள் விஜயலட்சுமி, திவ்யா, பணியாளர் சின்னச்சாமி பங்கேற்றனர். இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்வெல்பர் பொன்ராஜ் தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இஸ்மாயில் பங்கேற்றனர். பாலப்பன்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் சண்முகவேல் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் முத்துச்சாமி, முத்துலட்சுமி, இடைநிலை ஆசிரியர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.

