/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒட்டன்சத்திரம் வெங்காய விதைகள்
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒட்டன்சத்திரம் வெங்காய விதைகள்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒட்டன்சத்திரம் வெங்காய விதைகள்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒட்டன்சத்திரம் வெங்காய விதைகள்
ADDED : பிப் 10, 2025 05:26 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் சின்ன வெங்காய விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் சுற்று கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவு செய்யப்பட்ட 100லிருந்து 110 நாட்களுக்குள் பூக்கள் பூத்து குலுங்கும். இவற்றை பறித்தெடுத்து வெயிலில் காய வைத்து இயந்திரம் மூலம் வெங்காய விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பரில் நடவு செய்யப்பட்டு பிப்ரவரி இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. வெங்காய விதைகள் இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏஜன்ட்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.2024ல் கிலோ விதை ரூ.2200 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம் விவசாயி நாட்ராயன் கூறியதாவது:
நான் இரண்டரை ஏக்கரில் விதைகள் எடுப்பதற்காக சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கர் பயிரிட ரூ. 2 லட்சம் வரை செலவாகிறது. தேனீக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மகசூல் நன்றாக கிடைக்கும். ஏக்கருக்கு 400 கிலோ விதைகள் எடுக்கலாம். பயிரை நன்றாக பராமரித்து வந்தால் 450 கிலோ வரை மகசூல் கொடுக்கும். ஐந்துஆண்டுகளுக்கு முன்வரை கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளதால் ஆண்டுக்கு ஆண்டு விலை குறைகிறது. இந்தாண்டு கூடுதலாக விற்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.