/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆவல்சூரம்பட்டி செல்லும் பழநி கருப்பசாமி சிலை
/
ஆவல்சூரம்பட்டி செல்லும் பழநி கருப்பசாமி சிலை
ADDED : ஆக 05, 2024 07:03 AM

பழநி : விருதுநகர் மாவட்டம் காவல் தெய்வம் கருப்பசாமி சேவா சங்கம் சார்பில் உயரமான சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் குழுவாக தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இணைந்தனர்.
பழநியில் கருப்புசாமிக்கு கற்சிலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கரூரிலிருந்து பழநி அடிவாரம் கிரி வீதி பகுதியில் உள்ள சிற்ப கலைக்கூடத்திற்கு 70 டன் எடை பீடம் 3 அடியுடன் சேர்ந்து 24 அடி உயரத்தில் கல் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் உயரமான கருப்பசாமி, கற்சிலை தயாரானது.
இதன் எடை 45 டன்.கையில் அரிவாள் ஏந்திய நிலையில் நின்ற கோலத்தில் கருப்பசாமி சிலை அமைக்கப்பட்டது. பூஜை செய்து 2 கிரேன்கள் கொண்டுவரப்பட்டு லாரியில் ஏற்றி, சித்துார்- புளியங்குளம் ரோடு ஆவல்சூரம்பட்டி பகுதியில் மதுரை -கன்னியாகுமரி பைபாஸ் ரோடு அருகே அமைய உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.