/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நலத்திட்டங்களை துவங்கி வைத்த பழநி எம்.எல்.ஏ.,
/
நலத்திட்டங்களை துவங்கி வைத்த பழநி எம்.எல்.ஏ.,
ADDED : மார் 15, 2025 05:52 AM

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிழற் குடை திறந்து வைக்கப்பட்டது.
ரூ. 20 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் நலத்திட்டங்களை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். செயல் அலுவலர் சித்திரை கனி, பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், சுவாமிநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.