/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோவில் ஹோட்டல் அகற்றம் ஊழியர்கள் போராட்டம்
/
பழநி கோவில் ஹோட்டல் அகற்றம் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஆக 03, 2024 11:52 PM

பழநி:திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் வின்ச் ஸ்டேஷன் மேல் தள பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஹோட்டல் பொருட்களை அப்புறப்படுத்தியதால் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கோவில் நிர்வாகம், வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். கிரி வீதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
பழநி கோவில் வின்ச் ஸ்டேஷன் மேல் தளத்தின் அருகில் தனியார் கட்டுப்பாட்டில் 90 ஆண்டுகளுக்கு மேல் ேஹாட்டல் இயங்கி வருகிறது. நேற்று அதிகாரிகளின் உத்தரவின்படி, ேஹாட்டலில் இருந்த பொருட்களை கோவில் ஊழியர்கள் வின்ச் மூலம் அடிவாரப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.