/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.18,000 லஞ்சம் வாங்கிய பழனி கோவில் அதிகாரி கைது
/
ரூ.18,000 லஞ்சம் வாங்கிய பழனி கோவில் அதிகாரி கைது
ADDED : பிப் 22, 2025 01:41 AM

பழனி:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோவிலின் திருமண மண்டபத்தை புதுப்பிக்கும் பணியை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செந்தில்குமார், 49, டெண்டர் எடுத்தார்.
இதன் மதிப்பு, 71 லட்சம் ரூபாய். பணிகளை நிறைவு செய்த பின், இறுதிக்கட்ட பில், 21 லட்சத்திற்கான தொகையை பெற, பழனி கோவில் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டட பிரிவை, செந்தில்குமார் அணுகினார்.
அங்கு ஊரக செயற்பொறியாளராக உள்ள பிரேம்குமார், 50, பில் தொகை வழங்க, 18,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூற, அவர்கள் அறிவுரைப்படி பிரேம்குமாரிடம் நேற்று, 18,000 ரூபாயை செந்தில்குமார் வழங்கினார். அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரேம்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.