/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என கருதி பழனிசாமி விமர்சிக்கிறார் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கருத்து

ADDED : ஏப் 16, 2024 06:46 AM
பழநி: ''முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என கருதி அவரை முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சித்து வருவதாக'' மா.கம்யூ .,மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது: மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது .வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு போய் உள்ளது .பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இதைப் பற்றி எல்லாம் வெளியிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் ஐந்து ஆண்டுக்குள் மீண்டும் தேசத்தில் தேர்தல் நடத்த பா.ஜ.,திட்டமிடுகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கோரி யாரும் கேட்கவில்லை. நெல்லுக்கு நல்ல விலை கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இது குறித்து பா.ஜ.,தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. 2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்பதையும், நெல்லுக்கு ஆதார விலை அதிகரித்து தரப்படும் ,விவசாயிகளின் வருமானத்தை விரட்டிப் பார்க்கவும் என்ற பா.ஜ., வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பா.ஜ., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை பொய் கூறி வருகிறார். இண்டியா கூட்டணி ஜூனில் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிச்சாமி மோடி அரசை விமர்சனம் செய்யாமல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலினை என கருதி விமர்சனம் செய்து வருகிறார் என்றார்.