ADDED : ஆக 22, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும் இணைக்கப்படவில்லை.
மாநில நிதி குழு மான்யத்தில் ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது போல் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஆலோசகர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் கர்ணன், பொருளாளர் கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.