/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நாளை பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்
/
பழநியில் நாளை பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்
ADDED : மார் 22, 2024 01:57 AM
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா திருக்கல்யாணம் நாளை(மார்ச் 23) நடக்கிறது.
இத்திருவிழா பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 18 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினார்.
ஆறாம் நாளான நாளை (மார்ச் 23 ) மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வசேனா, முருகன் திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மார்ச் 24 மாலை திருத்தேரோட்டமும், மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவுடன், இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

