/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பதறுகிறது மனசு n பஸ்களில் தொடரும் மாணவர்கள் சாகச பயணம்: விபரீதங்கள் ஏற்படும் முன் தேவை நடவடிக்கை

ADDED : ஜூலை 05, 2024 05:57 AM

மாவட்டத்தில் மேல்நிலை , உயர்நிலை , நடுநிலை , தொடக்கப்பள்ளி என 1973 அரசு, தனியார் பள்ளிகள் , அரசு ,தனியார் கல்லுாரிகளும் இயங்குகின்றன. கல்வி கற்க ஏராளமான மாணவர்கள் கிராமங்களில் இருந்து நகர்களுக்கு சென்று வருகின்றனர். ஒரு சில தனியார் பள்ளி, கல்லுரிகள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களில் மாணவர்களை ஏற்றி வருகின்றன.
மற்றபடி அரசு பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் காலை , மாலையில் வீடு திரும்ப அரசு ,தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். மாணவர்கள் சென்று வர காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்காதது , பல கிராமங்களில் அரசு பஸ் வசதி இல்லாதது, திடீரென பஸ்கள் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
இதை பார்ப்போருக்கு விபரீதம் நடந்து விடுமோ என மனம் பதறுகிறது. காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர் என கூடுதலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் தினமும் அடித்து பிடித்து பஸ்சில் இடம் பிடித்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காண மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி காலை, மாலை வேலைகளில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.