/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை ஆசாமிகளால் பயணிகள் முகம் சுளிப்பு
/
போதை ஆசாமிகளால் பயணிகள் முகம் சுளிப்பு
ADDED : ஜூன் 10, 2024 05:36 AM

கொடைக்கானல், : கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் போதை ஆசாமிகளின் அருவருக்கத் தக்க செயல்களால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர்.
பஸ்களை தவிர்த்து தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லாத பஸ் ஸ்டாண்டில் தாராளமாக வாகனங்கள் நிறுத்தும் போக்கு உள்ளது.
இதனால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வாகனங்களில் மறைவான பகுதிகளில் இயற்கை உபாதை புரிவது, மது அருந்துவது உள்ளிட்ட தகாத செயல்கள் அரங்கேறுகின்றன.
பாராக செயல்படும் பஸ் ஸ்டாண்டில் தடுமாறும் குடிமகன்களின் செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.
அரை நிர்வாண நிலை, போதையில் தன்னிலை மறந்து மயங்கி கிடப்பது என நாள்தோறும் போதை ஆசாமிகளின் செயல்கள் பயணிகளை வெறுப்படைய செய்கிறது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசலா , கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தாராள புழக்கத்தில் உள்ளது. போலீசார் ரோந்து செல்வதும் இல்லை. இதைத்தடுக்க நகராட்சி,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.